'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதையடுத்து அந்த படத்தின் தெலுங்கு ரிமேக் கிலும் நடித்தவர், பின்னர் தனுஷின் கொடி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். என்றாலும், அந்த படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கில் சில படங்களை கைப்பற்றி பிசியான நடிகையாகியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
அந்த வகையில், தெலுங்கில் அஆ என்ற படத்தில் அறிமுகமான அனுபமா அதன்பிறகு பிரேமம் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்து மார்க்கொகட்டை பிடித்து விட்டாராம். இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும், தற்போது அவர் உன்னதி ஒக்கடே சிந்தகி -என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராம் நாயகனாக நடிக்கும் இந்த படம் காதல், நட்பு இரண்டையும் மையப்படுத்தி உருவாகியுள்ளதாம. இதே படத்தில் லாவண்யா திரிபாதியும் நடித்தபோதும் அனுபமா அழுத்தமான ரோலில் நடித்திருக்கிறாராம்.
இந்த படத்தில் அனுபமா நடித்து வந்தபோதே அவரது பர்பாமென்ஸ் பேசப்பட்டு வருகிறதாம். அதனால் யுத்தம் சரணம் படத்தை அடுத்து நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்திற்கு இப்போதே அனுபமாவை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம்.