தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள குணச்சித்திர நடிகர்களில் ஒருவர்தான் டினி டாம். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் ரூபி' படத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் புரோக்கராக படம் நெடுகிலும் கூடவே வரும் டினி டாம் கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர். அதன்பிறகு தான் மலையாளப் படங்களில் முக்கியத்துவமான கேரக்டர்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன. நடிகராவதற்கு முன் 'அண்ணன் தம்பி' படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த மம்முட்டிக்கு டூப்பாக நடித்தவர் இவர்தான். அந்தவகையில் மம்முட்டியுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் தான் டினி டாம்..
சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2010ல் 'பிரஞ்சியேட்டன் தி செயின்ட்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, தனது சட்டை ஒன்றை டினி டாமுக்கு பரிசாக அளித்தாராம் மம்முட்டி. டினி டாமும் அதை சந்தோஷமாக வாங்கி அவ்வப்போது அணிந்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் திடீரென டினி டாமுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பிய மம்முட்டி கூடவே ஒரு கேள்வியையும் கேட்டிருந்தாராம்.
அந்தப் புகைப்படத்தை பார்த்ததும் ஷாக்காகி விட்டாராம் டினி டாம். காரணம் மம்முட்டி, ரஜினி ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுடன் பல வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ஷாக்கானது அதற்கல்ல.. அந்த புகைப்படத்தில் மம்முட்டி அணிந்திருந்த சட்டையை பார்த்து தான். ஆம். டினி டாமுக்கு பரிசாக மம்முட்டி கொடுத்த சட்டையே தான்.. கூடவே மம்முட்டி கேட்ட கேள்வி என்ன தெரியுமா..? “இந்த சட்டையின் வயதை கண்டுபிடித்து சொல்” என்பதுதானாம். அது எந்த வருடம் நடந்த விழா என கூகுளில் மெனக்கெட்டு தேடிக்கொண்டு இருக்கிறாராம் டினி டாம்.