வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ்.. ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ். ஆனால் 2௦15ல் ஐந்து படங்களில் நடித்தவருக்கு 2016ல் படமே இல்லை.. கிட்டத்தட்ட சினிமாவில் தேய்பிறை நிலையில் இருக்கிறார் ஹனிரோஸ். சில வாரங்களுக்கு முன் இவர் நடித்த 'அவருடே ராவுகள்' படம் வெளியானாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
தற்போது அவர் மலைபோல நம்பிக்கொண்டு இருப்பது தான் நடித்துள்ள 'சங்க்ஸ் என்கிற படத்தைத்தான். காரணம் கடந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'ஹேப்பி வெட்டிங்' படத்தை இயக்கிய ஓமர் தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார்.. கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினீரிங் பிரிவில் அத்தனை பையன்கள் மத்தியில் ஒரே ஒரு மாணவியாக சேரும் ஹனிரோஸ், அங்கு உடன் படிக்கும் நான்கு மாணவர்களின் காதல் கலாட்டாக்களை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.