பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டைட்டிலே வைக்காமல் கடந்த சில மாதங்களாக மம்முட்டி நடித்து வரும் புதிய படத்திற்கு தற்போது 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புள்ளிக்காரன் ஸ்டாரா என்பதற்கு அவன் பெரிய ஆளோ என அர்த்தமாம். பிருத்விராஜை வைத்து 'தி செவன்த் டே' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஷ்யாம்தர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்தில் மம்முட்டி டீச்சர் ட்ரெய்னிங் கல்லூரியின் பேராசிரியராக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷா சரத் நடிக்கிறார்.
இந்தப்படத்தில், தான் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களையும் மம்முட்டி குழந்தைபோலவே நடத்துவாராம். அவர்களுக்கு கதைகள் சொல்வாராம். இந்த ஆசிரியர்களில் ஒருவராக ஆஷா சரத் நடிக்கிறார். 'வர்ஷம்' படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து ஆஷா சரத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு கதாநாயகியாக லால் ஜோஸின் 'நீ-நா' படத்தில் அறிமுகமாகிய தீப்தி சதி நடிக்கிறார்.