தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். ஆனால் அதற்கடுத்து மலையாள சினிமா அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை சில நாட்கள் மட்டுமே துல்கர் ஜோடியாக நடித்த நிலையில் அந்தப்படத்தில் இருந்து தூக்கப்பட்டார் அனு இம்மானுவேல். அவ்வளவுதான் அவரது சினிமா வாழ்க்கை என நினைத்த நிலையில் தெலுங்கில் இவர் நடித்த 'மஞ்சு' படம் ஹிட்டாகி 'நீ இங்கேயே இரும்மா' என அவரை இழுத்து பிடித்தது.
அதன்பின், தெலுங்கு சினிமா இவரை பவன் கல்யாண் படத்தில் அவருக்கு ஜோடியாக்கியது. தொடர்ந்து விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. இப்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'நா பேரு சூர்யா' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அனு இம்மானுவேல் வீட்டு கதவை தட்டி அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கி சென்றுள்ளது. சரத்குமார், அர்ஜூன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வக்கந்தம் வம்சி இயக்குகிறார்.