பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முக்கியமாக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது, ஆபாசமாக பேசுவது, சாதி உணர்வை தூண்டுவது, கலாச்சார சீர்கேடு செய்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக விஜய் டிவி மற்றும் நடிகர் கமல்ஹாசனின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், ஜூலை 16-ந்தேதி முதல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மா டிவியில் ஒளிபரப்பாகிறது. ஜூனியர் என்டிஆர் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 பேர் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே சர்ச்சை சந்தித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர்., நடத்தக்கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள், ஜூனியர் என்டிஆரின் சூப்பர் நடனத்துடன் தொடங்குகிறது.