திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. மலையாளத்தில் அதிகம் படித்த நடிகைகளில் ஒருவர். 2005-ம் ஆண்டு பை தி பீப்பிள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரபி. கடந்த ஆண்டு மின்னாமினுங்கு தி பியர்லி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
சுரபி லட்சுமி, கடந்த 2014ம் ஆண்டு தான் நீண்ட நாள் காதலித்து வந்த ஒளிப்பதிவாளர் விவின் சுதாகரை திருமணம் செய்து கொண்டார். தேசிய விருது வழங்கும் விழாவிற்கு கூட கணவனும் மனைவியும் ஒன்றாகவே வந்தார்கள். அதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
கணவரை விவாகரத்து செய்யப்போவதாக சுரபி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விவின் சுதாகருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருவரும் பிரிய இருக்கிறோம். இதுதான் நாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட கடைசி செல்பி புகைப்படம் என்று ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளார். ஆனால் விவாகரத்துக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே பாவனா விவகாரம் திலீப் கைதில் அதிர்ச்சி அடைந்திருக்கும் மலையாள சினிமா, மேலும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.