பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அந்தவகையில், கடம்பன், ஏஏஏ படங்களைத் தொடர்ந்து செம போதை ஆகாத, இரும்புத்திரை, அநீதி கதைகள், கொலையுதிர் காலம், மன்னவன் வந்தானடி, பலூன், சந்தனத்தேவன் ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து அஜீத்தின் 58வது படம், விஜய்யின் 62வது படம், சூர்யாவின் 36 வது படம் ஆகிய படங்களுக்கும் இசையமைக்க அவர் ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும், தமிழில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கோபிசந்த் நாயகனாக நடித்துள்ள ஆக்சிஜன் என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன். வருகிற ஜூலை 15-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி யுவனுக்கு தெலுங்கு சினிமாவில் நல்லதொரு ஓப்பனிங்கை கொடுத்துள்ளதாம்.
மேலும், இந்த ஆக்சிஜன் படத்தை இயக்கியுள்ள ஜோதி கிருஷ்ணா, ஏற்கனவே தமிழில் உனக்கு 20 எனக்கு 18, கேடி, ஊ லலலா ஆகிய படங்களை இயக்கியவர். கேடி படத்தின் மூலம் இலியானா, தமன்னா போன்ற நடிகைகளை இவர்தான் தமிழுக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.