‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விறுவிறுப்பாக தயாராகி வருகிறது மோகன்லால் நடித்து வரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்'. சினிமாவிற்குள் இத்தனை வருடமாக இருந்தாலும் கூட, முதன்முதலாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் இயக்குனர் லால்ஜோஸ். இந்தப்படத்தில் மைக்கேல் இடிகுலா என்கிற கேரக்டரில் ஒரு கல்லூரியின் துணை முதல்வராக நடிக்கிறார் மோகன்லால். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகும் புகைப்படங்களை பார்க்கும்போது படத்தின் மீதான பிரமிப்பு கூடவே செய்கிறது..
குறிப்பாக அவர் ஜோல்னா பை அணிந்துகொண்டு பாகவதர் ஹேர்ஸ்டைலுடன் சைக்கிள் ஓட்டிவருவது, வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போன்ற புகைப்படங்கள் மோகன்லால் புதிய லுக்கில் இருந்தாலும் ரொம்பவே சாப்ட்டாக இருக்கிறாரே என்கிற நினைப்பையே ஏற்படுத்தின.. ஆனால் தற்போது குறைத்து வெட்டப்பட்ட முடியுடன் நெற்றியில் சந்தனமுமாக முறுக்கிய மீசையுமாக, மோகன்லாலின் புதிய கெட்டப் புகைப்படம் வெளியாகியுள்ளது... கிட்டத்தட்ட ஒரு லோக்கல் டான் போல மோகன்லால் காட்சியளிப்பது, இதற்கு முன் அவர் கல்லூரியில் பாடம் எடுப்பது போன்ற காட்சிகளை வைத்து கணக்கிட்டால் படத்தில் மோகன்லாலுக்கும் ஒரு பாட்ஷா பிளாஸ்பேக் இருப்பதாகவே தோன்றுகிறது. அதுவே படத்தின் மீதான ஆர்வத்தை இருமடங்காக்கியுள்ளது.