‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதேபடத்தில் மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மேலும் இரண்டு நடிகைகள் அறிமுகமான போதும், மலர் என்கிற டீச்சர் வேடத்தில் நடித்த சாய் பல்லவி தென்னிந்திய அளவில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து அவரைத்தேடி பல படங்கள் சென்றபோதும், அவகரகதியில் படங்களை ஓகே பண்ணி நடிக்காமல், நல்ல கதையாக தேடிப்பிடித்து தற்போது தெலுங்கில் வருண்தேஜ்க்கு ஜோடியாக பிதா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை நயன்தாரா நடித்த அனாமிகா படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த பானுமதி என்கிற கிராமத்து பெண்ணாக நடித்துள்ள சாய்பல்லவி, பவன் கல்யாணின் ரசிகையாக வருகிறாராம். மேலும், சாய்பல்லவிக்கு தெலுங்கு மொழி சுத்தமாக தெரியாது என்ற போதும், அந்த படத்தில் தனது கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியிருக்கிறார். சாய் பல்லவியின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பிதா படம் ஜூலை மாதம் 21-ந்தேதி வெளியாகிறது.