வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் பிறந்த நாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் இருந்தும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.. கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால் தான் தற்போது விஜய்யின் கேரக்டரையும், அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளுக்கு இவர்கள் வாழ்த்து சொன்ன விதமும் அதை தங்களது படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொண்ட விதமும் புதுசு. இந்தப்படத்தில் தீவிர விஜய் ரசிகனாக, இல்லை இல்லை வெறியராக போக்கிரி சைமன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் சன்னி வெய்ன். இவரும் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும், 'தலைவா' என ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட ஆட்டோவில் பயணித்தபடி, “எல்லாப்புகழும்' ஒருவன் ஒருவனுக்கே என்கிற பாடலை சில வரிகள் பாடியபடி இறுதியில் ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா' என உற்சாகத்துடன் கத்துவதாக ஒரு டீசரையே வெளியிட்டு அசத்தியுள்ளார்கள்