ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனா படத்தில் நடிக்க வேண்டியவர் மகிமா நம்பியார். அப்போது அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பு கை நழுவியது. முதன் முதலில் காரியஸ்தன் என்ற மலையாளப்படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்தார். அதன் பிறகுதான் சாட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அந்தாதி, குற்றம் 23, படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது அண்ணனுக்கு ஜே, ஐங்கரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மகிமா தனது சொந்த மொழியான மலையாளத்தில் மீண்டும் நடிக்கிறார். மம்முட்டி நடிக்கும் மாஸ்டர்பீஸ் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அஜய் வாசுதேவ் இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டியுடன் உன்னி முகுந்தன், சந்தோஷ் பண்டிட், வரலட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து மலையாளப் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மகிமா.