தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் துவட ஜகன்னாதம். இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 23ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த குடுலோ பாடிலோ மடிலோ வாடிலோ -என்ற பாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
காரணம், இந்த பாடலின் வரிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் இணைக்கப்பட்டிருக்கிறதாம். காதலியை வர்ணிக்கும் அந்த பாடலை கவர்ச்சிகரமாக படமாக்கியிருக்கிறார்களாம். அதனால் பிராமணர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருப்பதாக ஆந்திராவிலுள்ள பிராமணர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் பிராமணரான இப்படத்தின் டைரக்டர் ஹரிஸ் சங்கர், இந்த பாடலின் வரிகள் எந்த வரம்பையும் மீறவில்லை. யாரையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று பாடலை எதிர்த்தவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.