‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் முதல்முறையாக மலையாள திரைப்பட உலகிலும் கால்வைத்து, ஒரு படத்தை தயாரித்து வருகிறது என்பது தெரிந்த செய்தி தான். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப்படத்திற்கு 'தரங்கம்' என டைட்டில் அறிவிக்கப்பட்டது.. இப்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது வுண்டர்பார் பிலிம்ஸ்.. இந்தப்படத்தை மினி ஸ்டுடியோ என்கிற மலையாள நிறுவனம் தனுஷுடன் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த பர்ஸ்ட்லுக்கில் சஸ்பெண்ட் ஆன இரு போலீஸ்காரர்கள் ஆக இடம் பெற்றிருப்பவர்கள் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் டொவினோ தாமஸ் மற்றும் அவரது நண்பனாக நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் பாலு வர்கீஸ் ஆகியோர் தான். இவர் தவிர இன்னொரு நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மலையாள இளம் நடிகரான உன்னி முகுந்தன்.. டொமினிக் அருண் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைக்கிறார்.