மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கடந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கொரட்டலா சிவா அந்த படத்தை இயக்கியிருந்தார். அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜெய் லவகுசா படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் முதன்முறையாக அவர் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை 3.15 மணிக்கு வெளியானது. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ஜூனியர் என்டிஆர்., ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் கொண்டு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு ஜூனியர் என்டிஆருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதையும் அவரது ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் கொண்டு வந்துவிட்டனர். ஆக பிறந்தநாளோடு தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.