ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜாலி எல்எல்பி-2 என்ற பெயரில் உருவானது. இதில் அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் குவித்தது. இப்படம் தெலுங்கில் ரீ-மேக்காக உள்ளது. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்தவாரம் செய்தி வெளியானது.
இந்நிலையில் வெங்கடேஷூக்கு பதிலாக நடிகர் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஜாலி எல்எல்பி-2 படத்தை பார்த்த பவனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதையடுத்து இந்தப்படத்தில் தானே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். பவன் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை, தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.