தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'புலி முருகன்' படத்திற்கு பிறகு வெளியான மோகன்லாலின் இரண்டு படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை.. காரணம் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' அக்மார்க் குடும்ப படம்.. அடுத்து வெளியான '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படமோ ராணுவ பின்னணியுடன் ஆக்சனுக்கு நிறைய வாய்ப்பிருந்தும் 'சப்'பென சாதாரணமாக கடந்துபோய் விட்டது. 'புலி முருகன்' படத்தில் மோகன்லாலின் உச்சபட்ச ஆக்சன் காட்சிகளை பார்த்து ரசித்தவர்களுக்கு அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்காவது தீனிபோட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது அவர் நடித்துவரும் 'வில்லன்' படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் பி.உன்னிகிருஷ்ணன்.
நேற்று இந்தப்படத்தின் ஒரு நிமிட டீசர் ஒன்றையும் வெளியிட்டார். இந்த டீசர் வெளியான 22 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையாளர்கள் இதை பார்த்து ரசித்துள்ளனர். சும்மா சொல்லக்கூடாது.. மோகன்லால் மீண்டும் ஸ்டைலிஷான ஆக்சன் மூடுக்கு திரும்பிவிட்டார் என்பதை டீசரின் அந்த சில நொடி காட்சிகளே உணர்த்துகின்றன. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன்லால் மாறுபட்ட இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார்.. மஞ்சு வாரியர் அவர் மனைவியாக நடிக்க, விஷால் மற்றும் ஹன்ஷிகா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.