மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திலீப் புதியதாக நடிக்கவுள்ள படம் தான் 'ராம் லீலா'. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக இருக்கிறது இந்தப்படம்.. திலீப் எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. அருண்கோபி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரயாகா மார்ட்டின் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். புலி முருகன் என்கிற மெகா ஹிட் படத்தை தயாரித்த தோமிச்சன் முளகுபாடம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த போஸ்டரை வெளியிட்டவர் சாட்சாத் நம்ம இயக்குனர் கௌதம் மேனனே தான். இந்த போஸ்டரை வெளியிட்ட கையுடன், திலீப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற விருப்பம் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கௌதம் மேனன். திலீப் தற்போது ஒரே நேரத்தில் கம்மார சம்பவம் மற்றும் புரபஷர் டிங்கன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.. அவற்றை முடித்ததும் ராம்லீலா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.