ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 12 தினங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படம் வெளியானது.. இது தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மம்முட்டி நடித்து ரிலீஸுக்கு தயாரான நிலையில் இருக்கும் 'புத்தன் பணம்' படத்தை வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக ஏப்-12ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.. இல்லை இந்தப்படம் வெளியாக வாய்ப்பில்லை என சிலர் வதந்தி பரப்ப, வதந்திகளை நம்ப வேண்டாம், அறிவித்ததுபோல ஏப்-12ல் இந்தப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மம்முட்டியின் பேவரிட் இயக்குனரான ரஞ்சித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய மோகன்லாலின் 'லோஹம்', பிஜுமேனன் நடித்த 'லீலா' ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு வெளியாகும் இந்தப்படம், ரஞ்சித்தை மீண்டும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம். பாஷையை மாற்றி பேசுவதில் வல்லவரான மம்முட்டி இந்தப்படத்திற்காக காசர்கோடு பாஷை பேசியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரெய்லர் முழுக்க புதிய நோட்டுக்கள் மற்றும் செல்லாத நோட்டுக்கள் குறித்த வசனங்களையும் காட்சிகளையும் இணைத்து பரபரப்பை கூட்டியுள்ளார்கள்.. படம் முழுக்க செல்லாத நோட்டு விவகாரத்தை மையப்படுத்தியது என்றே சொல்லப்படுகிறது.