Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரளாவில் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த மம்மூட்டி!

01 ஏப், 2017 - 09:14 IST
எழுத்தின் அளவு:
mammootty-beats-record-of-rajinikanth-movie-in-Kerala

மம்மூட்டி நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ள படம் தி கிரேட் பாதர். இந்த படத்தில் மம்மூட்டியுடன் ஆர்யா, சினேகா, மியா ஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர்கள் பிருதிவிராஜ், ஆர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஹனீப் ஆடென் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.


அதன்காரணமாக கேரளாவில் முதல்நாள் 4.31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது தி கிரேட் பாதர். இது கேரள பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை என்பதோடு, ரஜினி நடித்த கபாலி படத்தின் முதல்நாள் கேரளா வசூலை விட அதிகம் என்கிறார்கள். அதாவது கபாலி படம் 4.27 கோடி வசூலித்ததாம். அந்த வகையில், கேரளாவில் முதல்நாள் வசூலில் இதுவரை கபாலிதான் முதலிடத்தில் இருந்து வந்தது. அந்த இடத்தை தற்போது மம்மூட்டி படம் பிடித் துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தில் மோகன்லால் நடித்த படங்களே சூப்பர் ஹிட்டாகி வந்த நிலையில், தற்போது மம்மூட்டியின் இந்த படமும் வசூலில் நல்லதொரு ஓப்பனிங்கை கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.


Advertisement
10 பஹத் பாசில்கள் சேர்ந்தால் கூட ஒரு விநாயகனாக ஆகமுடியாது..!10 பஹத் பாசில்கள் சேர்ந்தால் கூட ஒரு ... கம்மட்டிப்பாடம் வாய்ப்பை பஹத் பாசில் தவிர்த்தது ஏன்..? கம்மட்டிப்பாடம் வாய்ப்பை பஹத் ...


வாசகர் கருத்து (4)

Raman Ganesan - Madurai,இந்தியா
02 ஏப், 2017 - 10:55 Report Abuse
Raman Ganesan அப்ப உங்க மம்முட்டி படம் வசூல் ஏன் கபாலி வசூல் மிஞ்சிருச்சு அப்படினு போடுறாங்க இதுக்கு முன்னாடி வந்த மம்முட்டி, மோகன் லால், சுரேஷ் கோபி படத்தை பத்தி போடா வேண்டி தானே யார் தடுத்தா உங்க மம்முட்டி , மோகன் லால் ஏன் அவங்க படத்துல ரஜினி பத்தி , ரஜினி டயலாக் பேசுறாங்க ஆட்டோக்காரன் பாட்டு, இதுக்கு முன்னாடி வந்த மம்முட்டி படத்துல உங்க மம்முட்டி போலீஸ் ஸ்டேஷன்ல போய் என்ன டயலாக் சொல்லுவாரு எல்லாரையும் lockup உடைச்சு கூட்டிட்டு போறதுக்கு நான் ஒன்னும் ரஜினிகாந்த் இல்லையே அப்படினு சொல்லுவாரே அதுக்கு பேரு என்ன வெங்கட் ரஜினி தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் of இந்தியா இது உங்க மம்முட்டி , லால் கோபி, சிரஞ்சீவி, வெங்கடேஷ் , பவன் கல்யாண், எல்லார்கிட்டயும் கேளுங்க அவங்க சொல்லுவாங்க
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
02 ஏப், 2017 - 07:45 Report Abuse
Raman Ganesan காளி இங்க உள்ள 5 அறிவு இதுக்கும் கை தட்டும் மெசேஜ் போடும் பாருங்க அது தான் ரஜினி
Rate this:
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
01 ஏப், 2017 - 22:02 Report Abuse
Venkataraman Sekkar கேரளாவில் கபாலி படம் 4 கோடி வசூல் என்பது மிகப்பெரிய பொய்
Rate this:
kali -  ( Posted via: Dinamalar Android App )
01 ஏப், 2017 - 21:32 Report Abuse
kali அடப்பாவிகளா கபாலி தமிழ் படம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in