Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

10 பஹத் பாசில்கள் சேர்ந்தால் கூட ஒரு விநாயகனாக ஆகமுடியாது..!

31 மார், 2017 - 14:15 IST
எழுத்தின் அளவு:
1-vinayagan-is-equal-to-10--fahad-fazil

கடந்த வருடத்தில் மலையாளத்தில் வெளியான படங்களில் இரண்டு நடிகர்களின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்றால் அது 'மகேஷிண்டே பிரதிகாரம்' பட நாயகன் பஹத் பாசில் மற்றும் 'கம்மட்டிப்பாடம்' படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த விநாயகன் இருவரை பற்றியும் தான். இதில் பஹத் பாசில் தனது இயல்பான தோற்றத்துடன் எளிமையான கிராமத்து இளைஞனின் குணாதிசயங்களை பிரதிபலித்து இருந்தார்..


ஆனால் கம்மட்டிப்பாடம் படத்தில் விநாயகன் படம் முழுக்க ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொருவிதமாக தனது தோற்றம் நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்.. அதற்கு அங்கீகாரம் செய்வதுபோலத்தான் சமீபத்தில் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது விநாயகனுக்கு வழங்கப்பட்டது.. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்காக உங்களுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் இருக்கிறதா என சமீபத்தில் பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது..


அதற்கு பஹத் பாசில், “மகேஷிண்டே பிரதிகரம் படத்தில் நான் நடித்த மகேஷ் பாவனா கேரக்டரை விநாயகனால் எளிதாக நடித்துவிடமுடியும்.. இன்னும் சொல்லப்போனால் என்னைவிட அந்த கேரக்டருக்கு புதிய பரிமாணத்தை விநாயகன் வழங்கியும் விடுவார். ஆனால் பத்து பஹத் பாசில்கள் ஒன்று சேர்ந்தாலும் 'கம்மட்டிப்பாடம்' படத்தில் 'கங்கா' கேரக்டரில் நடித்த விநாயகனின் நடிப்பை பக்கத்தில் நெருங்க முடியாது என்பதுதான் உண்மை.. சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவர் அவர்தான்” என பெருந்தன்மையுடன் விநாயகனை பாராட்டியுள்ளார் பஹத் பாசில்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in