பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மூன்று விதமான வித்தியாசமான வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜெய் லவகுச படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பவன் கல்யாணின் சர்தார் படத்தை இயக்கிய இயக்குனர் ராவீந்திர பாபி இயக்கும் இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரிக்கின்றார். ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வித வேடங்களில் நடிப்பதால், லாட் ஆஃப் ரிங்க்ஸ் படப்புகழ் ஹாலிவுட் மேக்கப் ஆர்டிஸ்ட் ஹார்ட்வெல் ஜெய்லவகுச படத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூனியர் என்.டி.ஆருக்காக ஹார்ட்வெல் தயாரித்துள்ள மேக்கப் மாஸ்க் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருவிழிகள் இல்லாது சிவந்த வெள்ளைவிழிகளுடன் ஜூனியர் என்.டி.ஆரின் முக அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான மாஸ்க் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தில் பெயர் எம்.லவக்குமார் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆகஸ்டில் ஜெய் லவகுச படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.