ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
இன்று மார்ச்-24ஆம் தேதி என்பது தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்கள் வரை ரிலீஸாகியுள்ளது. போர்க்களம் போல காட்சியளிக்கும் அதேவேளையில் மலையாள திரையுலகில் எந்த போட்டியும் ஆர்ப்பாட்டமும் இன்றி வழக்கம்போல இந்த வாரமும் இரண்டு படங்களே ரிலீசாகியுள்ளன. அதில் ஒன்று பாவனா கதாநாயகியாக நடித்துள்ள 'ஹனி பீ-2 : செலிபரேஷன்ஸ்''. மற்றொன்று பார்வதி (மேனன்) கதையின் நாயகியாக நடித்துள்ள 'டேக் ஆப்'.
பாவனா நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான 'குட்டிகளுண்டு சூழ்ச்சிக்க' படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் இந்த 'ஹனி பீ-2' படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் பாவனா. காரணம் இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டாகி பாவனாவின் கேரியரில் வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் பாவனாவுக்கு நேர்ந்த அசம்பாவிதங்களால் ஏற்பட்ட மனக்காயங்களுக்கு மருந்து போடும் விதமாக இந்த இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என நம்பலாம்.
அதேபோல படங்களை செலக்டிவாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி மலையாளத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான 'சார்லி' கடந்த 2015 டிசம்பரில் வெளியானது. கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருடம் கழித்து அவர் நடித்துள்ள இந்த 'டேக் ஆப்' படம் வெளியாகிறது என்றால் பார்வதியின் கதை தேர்வும் காத்திருக்கும் பொறுமையும் வீண்போகாது என்பது நிச்சயம். இந்தப்படத்தில் அரபு நாட்டில் பணிபுரியும் நர்ஸ் கேரக்டரில் நடித்துள்ளார் பார்வதி.. குஞ்சாக்கோ போபன் மற்றும் பஹத் பாசில் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.