'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த நேனு லோக்கல் திரைப்படம் 50 நாட்களைக் கடந்துள்ளது. இவ்வெற்றியை கொண்டாட படக்குழுவினர் ஐதராபாத்தில் சக்ஸஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். நேனு லோக்கல் படத்தின் 50வது நாள் போஸ்டருடன் சக்ஸஸ் மீட் குறித்து படக்குழு டுவிட்டரில் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் திரிநந்த ராவ் இயக்கிய நேனு லோக்கல் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெளியிட்ட முதல் வாரத்தில் ரூ25 கோடி வரை வசூல் செய்தது. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நானியின் திரைப்பட வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக நேனு லோக்கல் மாறியுள்ளது. ஐதராபாத்தில் இன்று(மார்ச் 24) நடைபெறவிருக்கும் நேனு லோக்கல் வெற்றி விழாவில் நானி, கீர்த்தி சுரேஷ், தில் ராஜூ, இயக்குனர் திரிநந்த ராவ் மற்றும் படக்குழுவினருடன் டோலிவுட் பிரபலங்களும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.