ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் எப்படி விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோதிக் கொள்கிறார்களோ, அப்படிப்பட்ட ஒரு மோதல் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுன் நடித்து வெளிவர இருக்கும், 'துவ்வட ஜெகன்னாதம்' படத்தின் டீசர் வெளிவந்த போது, பவன் கல்யாண் ரசிகர்கள் யு டியூபில் அந்த டீசருக்கு தொடர்ந்து 'டிஸ்லைக்'குகளைக் கொடுத்து வந்தனர். தற்போது வரை அந்த டீசரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் டிஸ்-லைக் செய்துள்ளனர். அந்த டீசருக் லைக் கொடுத்தவர்கள் 1 லட்சத்து 76 ஆயிரம் பேர். இரண்டுமே ஏறக்குறைய நெருக்கமாக இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த டீசருக்கு பவன் கல்யாண் ரசிகர்கள்தான் அதிகமான டிஸ்லைக்குகளைப் போட்டவர்கள் என்பது அல்லு அர்ஜுன் ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.
இப்போது அல்லு அர்ஜுன் ரசிகர்களின் 'டர்ன்'. பவன் கல்யாண் நடித்து இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் 'கட்டமராயுடு' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த டிரைலருக்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிஸ்லைக்குகளைக் கொடுத்து வருகின்றனர். இதுவரை 48 ஆயிரம் டிஸ்லைக்குகள் அந்த டிரைலருக்கு வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டு டிரைலருக்கு டிஸ்லைக் கொடுப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும் பவன் ரசிகர்கள் லைக் கொடுத்துக் கொடுத்து டிரைலருக்கான லைக்குகளின் எண்ணிக்கையை 1 லட்சத்து 66 ஆயிரம் வரை கொண்டு சென்றுவிட்டார்கள்.
முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக இருந்தால் எப்படியெல்லாம் மோதிக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழில் அடுத்து 'விவேகம்' டீசர் வெளி வரும் சமயத்தில் விஜய் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்களோ...?.