திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு இயக்குனர் நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அச்சரி அமெரிக்கா யாத்ரா எனும் புதிய படத்தின் பூஜை நேற்று(மார்ச் 19) திருப்பதியில் நடைபெற்றது. மஞ்சு விஷ்ணுவின் தந்தையும் பிரபல நடிகருமான மோகன் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் டோலிவுட் பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். சுப்ரமணிய ராஜூ கிளாப் அடிக்க, ராம கிருஷ்ணமா ராஜூ கேமிராவை ஆன் செய்தார். பிரபல இயக்குனர் கே ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார். இக்காட்சியின் படப்பிடிப்பில் மஞ்சு விஷ்ணுவுடன் பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மாணந்தம் கலந்து கொண்டார். கீர்த்தி சௌத்ரி மற்றும் கிட்டு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதரபாத் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் நடைபெறும் என கூறப்படுகின்றது.