'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி ஓடிகொண்டிருக்கும் படம் தான் 'C/O சாய்ராபானு'.. தாய்மார்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிவதாக விநியோகஸ்தர் வட்டாரங்களில் மகிழ்ச்சியுடன் பேசப்பட்டு வருகின்றன.. இந்தப்படத்தில் ஒரு கிராமத்தின் போஸ்ட் வுமனாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.. இந்தப்படத்தில் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரு பையனை தத்தெடுத்து வளர்க்கும் கேரக்டர் மஞ்சுவுக்கு.. அதுமட்டுமல்ல சுமார் இருபது வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அமலா.
இந்தப்படத்தை பார்த்தவர்கள் படத்தில் மோகன்லாலும் தனது பங்களிப்பை தந்திருப்பது கண்டு சர்ப்ரைஸ் ஷாக் ஆகியுள்ளார்கள். ஆனால் மோகன்லால் நேரடியாக நடிக்கவில்லை என்றாலும் தனது குரலை இந்தப்படத்திற்காக கொடுத்துள்ளார். மஞ்சு வாரியர் தத்தெடுக்கும் பையனின் தந்தை கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பது மோகன்லால் தான். முழுப்படத்தையும் பார்த்துவிட்டே அதன்பின் இந்த கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் மோகன்லால். இப்போது படத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு கண்டு, “இந்தப்படத்தில் எனது பங்களிப்பும் சிறிய அளவில் இருப்பதற்கு உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.