சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ராம் மிகவும் எதிர்பார்த்து நடித்த ஹைப்பர் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இப்படத்திற்கு பின்னர் ராம் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இயக்குனர் கிஷோர் திருமலா இயக்குகின்றார். ஏப்ரல் 25ல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கிஷோரின் நெருங்கிய நண்பரான ஹரிச்சரண், தனது டுவிட்டரில் இப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன், மேகா ஆகாஷ் என இருவர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். நாயகன் ராமின் நெருங்கிய உறவினர் சரவந்தி ரவி கிஷோர் மற்றும் மல்டி டைமென்ஷன் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வில் இயக்குநர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.