'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் டீஜே திரைப்படம் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 7ல் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். காரணம் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கட்டமராய்டு திரைப்படம் மார்ச் 24ல் திரைக்கு வருதே ஆகும். நெருங்கிய உறவினர்களான பவன் கல்யாணுக்கும் அல்லு அர்ஜூனுக்கும் இடையே பனிமூட்ட போர் நடைபெறுவதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. பவன் கல்யாண் மீது அல்லு அர்ஜூன் எதிர்மறையான கருத்தைக் கூறவே அந்த கோபத்தை பவன் கல்யாண் ரசிகர்கள் டீஜே டிரைலரை டிஸ்லைக் செய்து தீர்த்துக் கொண்டனர். இருப்பினும் எதுக்கு பிரச்சைனை என்று தனது டீஜே படத்தின் திரையிடும் தேதியை அல்லு அர்ஜூன் மாற்றி வைத்துவிட்டார் போலும். மார்ச் 24ல் கட்டமராய்டு திரைக்கு வருவதை தொடர்ந்து ஏப்ரலில் பாகுபலி-2 படமும் ரிலீஸ் ஆவதால் டீஜே படத்தை மே மாதத்திற்கு ஒத்தி வைத்துவிட்டனர்.