இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிறமொழிப்படங்களின் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வெற்றிகண்ட நடிகர் வெங்கடேஷ் மலையாள திரைப்படமான த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்து வருகின்றார். குரு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகும் இறுதிச்சுற்று படத்தை தெலுங்கிலும் இயக்குனர் சுதா இயக்குகின்றார். இப்படத்தின் வாயிலாக தமிழில் பிரபலமான நாயகி ரித்திகா சிங் டோலிவுட்டிலும் அறிமுகமாகின்றார். பெரும்பாலும் குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கட்டுமஸ்தான பாக்ஸிங் கோச்சாக நடிக்கின்றார். இப்படத்தின் டிரைலர் மார்ச் 20 ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் இறுதியில் திரைக்கு வரும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் முதன்முறையாக பாடகராகவும் வெங்கடேஷ் அறிமுகமாகின்றார். வெங்கடேஷ் பாடி ஜிங்கிடி பாடல் ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.