ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு வடக்கன் செல்ஃபி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகின்றது. அல்லரி நரேஷ் நிவின்பாலி வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தை இயக்கிய இயக்குனர் பிரஜித் தெலுங்கிலும் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் பொள்ளாச்சியில் துவங்கவுள்ளது. மேட மீடா அப்பாயி என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நிகிலா விமல் நாயகியாக நடிக்கின்றார். பூபன்னா சந்திரசேகர் தயாரிக்கும் இப்படத்தை படப்பிடிப்பை இடை நிறுத்தாமல் தொடர்ந்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.