தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மைத்திரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. தற்போது கட்டமராய்டு எனும் ஆக்ஷன் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதனிடையே பவன் கல்யாண் படத்தை இயக்க முயற்சித்து வரும் மைத்திரி மூவீஸ் நிறுவனம் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
பவன் கல்யாண் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் அப்படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்குவார் என கூறப்படுகின்றது. மைத்திரி மூவீஸிற்கு ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் கொரட்டலா சிவா. இதனால் அவரை தங்கள் அடுத்த படத்திற்கு இயக்குனராக மைதிரி மூவீஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.