ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து தற்போது இயக்கிவரும் படத்திற்கு 'வில்லன்' என டைட்டில் வைத்து படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார். மேலும் 'நல்லது தான் கெட்டது' என்கிற அர்த்தம் வரும்படியாக 'குட் இஸ் பேட்' என டேக்லைனையும் குறிப்பிட்டுள்ளார் உன்னிகிருஷ்ணன். இந்தப்படத்தில் மோகன்லால் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.. நடிகை மஞ்சு வாரியார் மோகன்லாலின் மனைவியாக நடிக்கிறார்.,
இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக விஷால் மட்டுமல்ல, ஹன்ஷிகாவும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி விஷால் இந்தப்படத்தில் வில்லனாக நடிப்பதாகத்தான் சொல்லப்பட்டு வருகிறது.. அதனால் வில்லனாக நடித்தாலும் கூட, டைட்டில் ரோலில் தான் விஷால் நடிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை ரஷி கன்னா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இதற்கு முன் இதே டைட்டிலில் தமிழில் அஜித் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.