அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
2016ஆம் வருடத்திற்கான கேரள அரசு விருதுகளை பெறுபவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்னெப்போதும் போல அல்லாமல் இந்தமுறை அறிவிக்கப்பட்ட பட்டியலை பார்க்கும்போது நிறைய ஆச்சர்யங்களும் ஒருசில அதிர்ச்சிகளும் ஏற்படவே செய்கின்றன. சிறந்த நடிகருக்கான விருத்து ஒப்பம்' படத்தில் கண்பார்வையற்றவராக நடித்த மோகன்லாலுக்குத்தான் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்..
ஆனால் 'கம்ம்மட்டிப்பாடம்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய (திமிரு' புகழ்) விநாயகனுக்கு கிடைத்துள்ளது..அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவருக்கோ அல்லது அவருடன் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடித்த மணிகண்டன் ஆச்சாரி என்பவருக்கோ சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைக்கும் என சத்தியம் செய்யாத குறையாக அனைவரும் கூறினார்கள். எதிர்பார்த்தது போல மணிகண்டன் ஆச்சாரிக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.. இந்தப்படத்தின் நாயகனாக நடித்த துல்கரும் சிறந்த நடிகருக்கான போட்டியில் இருந்தார் என்பது கவனிகத்தக்கது..