ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடித்து வரும் டீஜே படத்தின் டீசர் இன்று வெளியானது. ஏற்கனவே இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி அல்லு அர்ஜூன் தெலுங்கு பிராமின் சமையற்காரராக இப்படத்தில் நடிப்பதை கூறியிருந்தது. இதனால் புதுவித கெட்டப்பில் அல்லு அர்ஜூனை பார்க்க ஆவலுடன் இருந்த ரசிகர்களை டீஜே டீசர் ஏமாற்றி விட்டதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. 16,000க்கும் மேற்பட்ட வியூவ்ஸை அள்ளியுள்ள டீஜே டீசருக்கு லைக்ஸும் டிஸ்லைக்ஸும் சம அளவில் வந்துள்ளதே இந்த விமர்சனங்களுக்கு காரணம். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள டீஜே படத்தில் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு கபார் சிங் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஹரீஷ் சங்கர் அல்லு அர்ஜூனுக்கும் டீஜே எனும் சூப்பர் ஹிட் கொடுப்பாரா என பொருந்திருந்து பார்ப்போம்.