மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து வரும் கட்டமராய்டு படத்தின் படப்பிடிப்புகள் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பவன் கல்யாண் மற்றும் இப்படத்தின் நாயகி ஷ்ருதிஹாசன் பங்கேற்கும் டூயட் பாடலுக்கான படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கின்றது. பவன் கல்யாணின் நண்பர் சரத் மாரர் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு வருடப்பிறப்பான மார்ச் 28ல் திரைக்கு கொண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கட்டமராய்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தெரிகிறது. யுகாதிக்கு முன்னதாகவே மார்ச் 24ல் கட்டமராய்டு திரைப்படம் திரைக்கு வரும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.