காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம் | பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால் | யூ-டியூப்பில் நேரலையில் பேசுகிறார் கமல் | ரஜினி கட்சியில் ஆனந்தராஜ்? | பிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி | சினிமாவில் செக்ஸ் தொல்லை : ரம்யா நம்பீசன் ஒப்புதல் | பிகினியில் ரசிகர்களை சூடேற்றிய ராய் லட்சுமி | 'கோட்டயம் குர்பானா'வில் புதிய நயன்தாரா | பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்த உன்னி முகுந்தன் |
விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவர்கள், ஏன் சிறு குழந்தைகள் கூட, படத்தில் இடம்பெறும் புலியை வேட்டையாடும் அவரது பிரத்யேக ஸ்டைல் ஒன்றை அடிக்கடி செய்துகாட்டும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவை நிறைத்து வருகின்றன..
அப்படித்தான் ஆழப்புழாவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோகன்லால் வேல் எறிந்து புலியை கொள்வது போல 'புலி முருகன்' பாணியில் கையில் இருந்த இரும்புக்கம்பியை புலியை நோக்கி வீசுவதுபோல வீசியுள்ளான்.. ஆனால் அவன் வைத்த குறி, அந்த இரும்புக்கம்பி அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரோஷன் மேரி என்கிற 9 வயது சிறுமியின் கண்களை தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.