Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாவும், டாப்சியும் என் தோழிகள்: ராணா

16 பிப், 2017 - 01:01 IST
எழுத்தின் அளவு:
Trisha-and-Tapsee-are-good-friends-says-Rana

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கும் பிரபல நடிகையரின் மனம் கவர்ந்த நடிகர், ராணா. சக நடிகையருடன் கிசு கிசுக்களில் சிக்குவது, இவருக்கு சர்வசாதாரணம். இந்தாண்டில் மட்டும், நான்கு படங்கள், இவர் நடிப்பதில் வெளியாகவுள்ளது. இதில், காஸி படமும் ஒன்று. இனி, ராணாவுடன் பேசலாம்:


காஸி படம் பற்றி சொல்லுங்க?


தேசபக்தி நிறைந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாக இருந்தது. காஸி படத்தின் மூலம், அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த சண்டையின் ஒரு பகுதி தான், இந்த படத்தின் கதைக்களம். எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல், நம் நாட்டின் மீது போர் தொடுக்க, அதை நம் நாட்டு வீரர்கள் எதிர்க்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளை, நீர் மூழ்கி கப்பலில் தான், படமாக்கியுள்ளோம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, மூன்று மொழிகளில் படம் தயாராகியுள்ளது. புதுமுக இயக்குனர் சங்கல்ப் எழுதிய, ப்ளூ பிஷ் என்ற புத்தகத்தை வைத்து, அவரே இந்த படத்தை இயக்கி உள்ளார். ராணுவம் பற்றிய பல படங்கள் வந்துள்ளன. ஆனால், முதன்முறையாக, முழுக்க முழுக்க கடற்படை பற்றி எடுக்கப்பட்ட படம், இதுவாகத் தான் இருக்கும்.


இந்த படத்தில் நடித்த அனுபவம் ?


ஒவ்வொரு படமும், நடிகர்களுக்கு புதுப்புது அனுபவத்தை தரும். இந்த படத்துக்காக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நானும் பலரை சந்தித்து, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். கடலுக்கு அடியில் சண்டை காட்சிகள் எடுத்தது, ரொம்ப சவாலா இருந்தது. டாப்ஸிக்கும் இந்த படம், புதிய அனுபவமாக இருக்கும்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நிறைய கெஸ்ட் ரோல் பண்றீங்க போல ?


ஆமாம்; எல்லாம் என் நட்புக்காகத் தான். எனக்கு, இப்படி அப்படி என, கணக்கு போட தெரியாது. என்னிடம் வந்து நணபர்கள் கேட்டால், உடனே, ஓகே சொல்லிவிடுவேன்.


தமிழில், எப்போது ஒரு நிலையான இடத்தை பிடிக்க போறீங்க?


நான் பிறந்தது சென்னையில். இப்போது இருப்பது ஐதராபாத்தில். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட, பல மொழிகளிலும் படம் பண்றேன். என் கேரக்டருக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கிறதோ, அதை தேர்வு செய்து, அவற்றில் மட்டும் நடிக்கிறேன்.


உங்களுக்கு சினிமாவில் நிறைய தோழிகள் இருக்கின்றனர் போலிருக்கிறதே?


எனக்கு ஆண் நண்பர்கள் கூட இருக்கின்றனர்; அவர்களை பற்றி கேட்க வேண்டியது தானே. நான், நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து உள்ளனர்; அவ்வளவு தான்.


தமிழில் நடிக்க விரும்பும் இயக்குனர்கள் ?


பாலா, மணிரத்னம், கவுதம், கார்த்திக் சுப்புராஜ் என, பலர் உள்ளனர். வித்தியாசமாக கதை பண்ண கூடிய இயக்குனர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்.


ஸ்ரேயா, த்ரிஷா, டாப்ஸி, யார் ரொம்ப நெருக்கம்?


ஒரு சில கேரக்டர்களுக்கு டாப்ஸி பொருத்தமாக இருப்பார்; இன்னும் சில கதைகளுக்கு த்ரிஷா நெருக்கமாக இருப்பார். எல்லாருமே தோழிகள் தான்.


த்ரிஷாவுக்கு ஸ்பெஷலா ஆதரவு கொடுப்பது மாதிரி இருக்கே?


அப்படி எல்லாம் இல்லை. என்னுடன் நடிக்கும் மற்றும் நட்புடன் பழகும் எல்லா நடிகையருக்கும் ஆதரவாகத் தான் இருக்கிறேன். சென்னைக்கு வந்தால், இப்படி கேட்கிறீங்க; மும்பைக்கு போனால், அங்கே ஒரு மாதிரி கேட்கின்றனர்; எனக்கு எதுவுமே புரியவில்லை.


நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டீர்களா?


என்ன இப்படி கேட்டுட்டீங்க; விஷால் ஒரு நாள் போன் செய்து, டேய், மெம்பர்ஷிப் செக் இன்னும் வரவில்லை; உடனே அனுப்பு என, கேட்டார்.உடனே அனுப்பி வைத்து விட்டேன். எனக்கு தெரிந்தவரை, ஆந்திரா, தமிழகம், மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள, நடிகர் சங்கங்களில் உறுப்பினராக இருப்பது நான் மட்டுமாகத் தான் இருக்கும் என, நினைக்கிறேன்.

Advertisement
இரட்டை விருந்து காத்திருக்கு!இரட்டை விருந்து காத்திருக்கு! பிப்ரவரி 17ல் 7 படங்கள் ரிலீஸ் பிப்ரவரி 17ல் 7 படங்கள் ரிலீஸ்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in