புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நாகார்ஜூனா ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தராக நடித்து வெளிவந்ததுள்ள பக்தி திரைப்படம் ஓம் நமோ வெங்கடேஷாய. பிரபல பக்தி பட இயக்குனர் கே.எஸ் ராகவேந்திர ராவ் இயக்கிய இப்படத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, விமலா ராமன், ப்ரக்யா ஜெய்ஸ்வால், ராவ் ரமேஷ், சௌரப் ராஜ் ஜெயின் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்த போதிலும் படக்குழுவினர் சக்ஸஸ் மீட் வைத்து கொண்டாடியுள்ளனர். இதில் நாகார்ஜூனாவின் மனைவி அமலா கலந்து கொண்டுள்ளார். அகில் மற்றும் நாகசைதன்யாவின் திருமண ஏற்பாடுகளில் பிசியாக இருக்கும் அமலா தனது கனவர் நாகார்ஜூனா பட புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்தது கிடையாது. அந்த வகையில் ஓம் நமோ வெங்கடேஷாய பட சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட அமலா கூறுகையில் இறுதிக்காட்சிகளில் நாகார்ஜூனாவின் நடிப்பைப்பார்த்து மெய் மறந்ததாக தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.