'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், நடிப்பில் உருவாகி வரும் கட்டமராய்டு திரைப்படம் மார்ச்சில் திரைக்கு வரும் என கூறப்பட்டது. இயக்குனர் டாலி இயக்கத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கும் இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் ஹிட் அடித்த வீரம் படத்தின் ரீமேக்காகும். பவன் கல்யாணின் நண்பர் சரத் மாரர் தயாரித்துள்ள கட்டமராய்டு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனசேனா எனும் அரசியல் கட்சியையும் நடத்தி வரும் பவன் கல்யாண் தற்போது அரசியலில் பிசியாகியுள்ளார். எனவே கட்டமராய்டு படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர அவர் முயற்சித்து வருகின்றார். மார்ச் இறுதியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்ட கட்டமராய்டு படத்தை மார்ச் 24ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.