Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரளா திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக 100 தியேட்டர்கள்..!

11 ஜன, 2017 - 16:02 IST
எழுத்தின் அளவு:
100-new-theatres-in-kerala

மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுற போகிறது.. ஸ்ட்ரைக் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதில் தலையிட்டு, புதிதாக விசாரணை கமிஷன் அமைக்கும் வரை பழைய முறை தொடரட்டும் என்றார்..


இதற்கு தியேட்டர் எக்சிபிடர்ஸ் பெடரேஷன் சார்பில் சம்மதித்தாலும், அவர்களால் காயம் பட்ட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது பில் கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க, கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் கேரள மாநிலம் முழுவதுமாக மொத்தம் நூறு தியேட்டர்களை புதிதாக நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.


இதில் முதல் கட்டமாக முதலில் 35 தியேட்டர்களின் கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த திரையரங்குகள் அனைத்தும் 250 இருக்கைகளை கொண்டதாக இருக்குமாம். அதேசமயம் கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் சுமார் 700 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான திரையரங்கம் ஒன்று கட்டப்பட இருக்கிறதாம்.. இனி வரும் நாட்களில் இதுபோல தியேட்டர் அதிபர்களுடன் தயாரிப்பாளர்கள் முரண்பட்டு நிற்கும்போது இந்த நூறு தியேட்டர்கள் தயாரிப்பளர்களை பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளும் என கேரளா திரைபட வளர்ச்சி கழகமும் கேரள அரசும் கருதுகிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in