Advertisement

சிறப்புச்செய்திகள்

என் வாழ்க்கையை மாற்றிய படம் பாகுபலி : ராணா | தமிழில் வெளிவருகிறது கார்டியன் ஆஃப் கேலக்ஸி | காற்று வெளியிடை கதவு திறந்தது: காஷ்மீருக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா | தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ் விஜய்யுடன் சந்திப்பு | தமிழ் சினிமாவை முழுமையாக மாற்றியவர் பாரதிராஜா! -மணிரத்னம் பேச்சு | சத்ரு படத்தில் என்னை பெருமைப்படுத்தும் பாடல் -பாடலாசிரியர் சொற்கோ | சீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை! -சொல்கிறார் ஜனனி | ரஜினியின் ஆலோசனையை ஏற்ற தனுஷ் | ஏ.ஆர்.ரெஹானா சொன்னது நடந்தது -ஹிப்ஹாப் தமிழா ஆதி | நீச்சல் குளத்தில் குளிக்க தைரியம் இருக்கிறதா? -கேட்கிறார் விவேக் ஓபராய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

100 பேருக்கு 50 லட்சம் செலவில் கண் சிகிச்சை அளிக்கும் திலீப்..!

11 ஜன,2017 - 16:00 IST
எழுத்தின் அளவு:

மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப் சினிமாவிற்கு ஒதுக்கிய நேரம் போக, தனது மீதி நேரம் மற்றும் பணம் என இரண்டையும் சமூக நோக்கிலான நல்ல காரியங்களுக்கு ஒதுக்கி உதவி வருகிறார்.. இதற்காகவே தந்தையின் பெயரில் சிபி பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.. இந்த புது வருடத்தில் முதல் நடவடிக்கையாக, அதிக செலவிலான கண்பார்வை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ள 100 பேருக்கு 50 லட்சம் செலவில் கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் திலீப்.. இந்த சிகிச்சையை திலீப்பிற்கு சொந்தமான கண் மருத்துவமனையே இலவசமாக அளிக்க இருக்கிறது.

இதற்கான அறிவிப்பு விழா நேற்று சாலக்குடியில் உள்ள லயன்ஸ் கிளப்பில் நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய திலீப் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.. “நான் சினிமாவுக்கு வருவதற்குமுன் ஒருநாள் எனது அம்மா சமையற்கட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது கண்களில் தூசு விழுந்தது.. சின்ன விஷயம் தானே சரியாகிவிடும் என நினைத்தால், அது பெரிதாக மாறி, அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி, இறுதியாக ஒரு கண்ணின் பார்வையையையும் பறித்துக்கொண்டது. பின் நான் சினிமாவிற்கு வந்து பணம் வந்ததும் என் தாய்க்கு கண் சிகிச்சை அளித்து அவரது பார்வையை மீட்டேன்.. ஆனால் அந்த நாட்களில் அவர் பட்ட வேதனை என்னை நீண்ட நாட்களாகவே உறுத்தி வந்தது.. அதனால் இப்போதும் கூட பார்வையற்ற யாரை பார்த்தாலும் எனது தாய்தான் ஞாபகத்துக்கு வருவார். எனவே தான் கண் பார்வை இழந்தவர்களுக்காக இந்த இலவச சிக்கிச்சை அளிக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளேன்” என கண் கலங்க பேசினார் திலீப்.


Advertisement
மம்முட்டி படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் இனியா..!மம்முட்டி படத்தை ஆவலுடன் ... கேரளா திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக 100 தியேட்டர்கள்..! கேரளா திரைப்பட வளர்ச்சி கழகம் ...


வாசகர் கருத்து (1)

sathish -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன,2017 - 13:54 Report Abuse
sathish hats off dileep Attaa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film AARAMBAMEY ATTAGASAM
  Tamil New Film sangili bungili kadhava thorae
  Tamil New Film Vilayattu Aarambam
  Tamil New Film Jetleey

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in