இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
அஜித், லக்ஷ்மி மேனன், ஷ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில், தமிழில் சூப்பர் ஹிட்டான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னரும் அஜித்தின் வேதாளம் ரீமேக்கில் நடிக்கின்றார். இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு தங்கையாக நடிக்க மலையாள நடிகை நிவேதா தாமஸிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். போராளி, நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் ஜென்டில்மேன் படத்தில் நாணிக்கு ஜோடியாக டோலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்த நிவேதா தாமஸ் அடுத்ததாக பவன் கல்யாணுக்கு தங்கையாக நடிக்கவுள்ளார்.