ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம் சரண் நாயகனாக நடிக்க துருவா என்ற பெயரில் நேற்று திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள துருவா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். ராம் சரணின் மனைவி உபசேனா துருவா படம் வெற்றி அடைய தனது கணவர் ராம் சரண், நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்ட துருவா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி குறிப்பிட்டுள்ள உபசேனா, ‛‛உடலளவிலும் மனதளவிலும் துருவா படத்திற்காக ராம் சரண் கடுமையாக உழைத்ததாக'' தெரிவித்துள்ளார். துருவா படம் வெற்றி பெற உழைத்த ராம் சரண், ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் உபசேனா தெரிவித்துள்ளார்.