Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப் - காவ்யா மாதவன் திடீர் திருமணம்...!

25 நவ, 2016 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Dileep---Kavya-Madhavan-sudden-marriage-today

இத்தனை வருடங்களாக வதந்திகளுக்கு தீனிபோட்டு வளர்த்து வந்த மலையாள நட்சத்திரங்கள் திலீப்பும் காவ்யா மாதவனும் இன்று கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர். கேரளாவில் இன்று பரபரப்பாக அரங்கேறிய இந்த நிகழ்வில் நடிகர் மம்முட்டி, ஜெயராம், லால், சலீம்குமார், நடிகை மேனகா, கே.பி.ஏ.சி லிதா உள்ளிட்ட சில பிரபலங்களும் திலீப், காவ்யா மாதவனின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


திருமணம் முடிந்ததும் திலீப்பும் காவ்யா மாதவனும் தங்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கமலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.. நேற்று மாலை தான் தனது திருமண முடிவை தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்து மீடியாவின் பரபரப்பின்றி இந்த திருமணத்தை நடத்தியுள்ளார் திலீப்.


மலையாள நடிகை மஞ்சு வாரியாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட திலீப், அதன்பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்தார்.. அவரது விவாகரத்துக்கு காரணமே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் உள்ள நெருக்கம் தான் என சொல்லப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் திலீப்பும் காவ்யா மாதவனும் பலமுறை மறுத்தே வந்துள்ளார்கள். திலீப் தனக்கு வயதிற்கு வந்த மகள் இருப்பதால் அவரை பாதிக்கும் விதமாக, அவரது கருத்துக்கு மாறாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்றும், தனது மறு திருமணம் என்பது தன் மகள் எடுக்கும் முடிவில் தான் அடங்கியுள்ளது என்றும் சில சமயங்களில் சூசகமாக உணர்த்தியும் வந்துள்ளார்..


சில மாதங்களுக்கு முன்பு திலீப்பும் காவ்யா மாதவனும் 'பின்னேயும்' என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது மீண்டும் திருமண செய்திகளில் அடிபடத்தொடங்கினர். ஆனால் அப்போதும் கூட தங்களுக்குள் நட்பு தவிர வேறெதுவும் இல்லை என மறுக்கவே செய்தார்கள்.. இதோ இப்போது திலீப்பின் மகள் மீனாட்சி இவர்களது திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துவிட்டதால், இருவரும் தங்களது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இன்று காலை திருமணம் செய்துகொண்டு வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in