இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் ஒருபக்கம் அறிமுகமானாலும், மலையாளத்திலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படத்திற்கு 'பூமரம்' என பெயர் வைத்துள்ளார்கள். நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டு முறை நூறு நாள் படங்களாக கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்..
கல்லூரி கேம்பஸை மையமாக வைத்து, சில ஆய்வுப்பணிகள் செய்து இந்தக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் அப்ரிட் ஷைன். காளிதாஸ் தான் ஹீரோ என்றாலும், படத்தின் மிக முக்கியமான கேரக்டரில் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார்.. கொஞ்ச நேரமே வந்துபோகும் கதாபாத்திரம் தான்.. அதேபோல மீரா ஜாஸ்மினும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.. குஞ்சாக்கோவுக்கு மீரா ஜாஸ்மின் ஜோடியா என்பது பற்றி எல்லாம் வாய்திறக்க மறுக்கிறார் இயக்குனர் அப்ரிட் ஷைன்.. கேம்பஸ் படம் என்றாலும் 35 வயதுக்குட்பட்ட நண்பர்களை பற்றிய கதையாம் இது.