ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரை உலகின் முன்னணி இளம் நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெற்றி பெற்ற பிரேமம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அண்மையில் திரைக்கு வந்து தெலுங்கிலும் வெற்றி வாகை சூடியது. பிரேமம் படத்தைத் தொடர்ந்து நிவின் பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஹிட் அடித்த “ஒரு வடக்கன் செல்ஃபி: எனும் மலையாள திரைப்படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. டோலிவுட்டின் நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷ் நிவின் பாலி வேடமேற்று நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். முக்கியத்துவமான நாயகி வேடம் என்பதால் அமலா பாலும் இப்படத்தில் நடிக்க வாய்வார்த்தையாக சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் ஒப்பந்தத்தில் கையழுத்திடுவார் என கூறப்படுகின்றது . அறிமுக இயக்குனர் அனீஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகின்றார். இன்டுலோ தெய்யம் நாகேம் பய்யம் எனும் திகில் காமெடி படத்தில் நடித்து வரும் அல்லரி அப்படத்திற்கு பின்னர் ஒரு வடக்கன் செல்ஃபி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.