ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயனின் புதிய முயற்சியில் உருவான ரெமோ திரைப்படம் எதிர்பார்ப்பிற்கேற்ப வெற்றி பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது. தெலுங்கில் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் ரெமோ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நவம்பர் 1ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் தமிழில் ஹிட்டான ரெமோ பாடல்கள் விரைவில் தெலுங்கில் வெளிவரவுள்ளன. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான நேனு சைலஜா திரைப்படத்திற்கு பின்னர், நேனு லோகல் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார். நேனு லோகல் படத்திற்கு முன்னதாகவே கீர்த்தி சுரேஷின் ரெமோ வெளிவரவுள்ளது.