கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நாகசைதன்யா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கின்றார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், லவன்யா திரிபதி மற்றும் பலர் நடித்த சொக்கடே சின்னி நயன படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா தற்போது நாகசைதன்யா நடிப்பில் காதல்கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 4ல் பூஜையுடன் துவங்குகின்றது. நாகார்ஜூனா இப்படத்தை அன்னபூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நாகசைதன்யா நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை நாகசைதன்யா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.