விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ்.. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டுக்கு சென்று வி.எப்.எக்ஸ் பற்றி ஐந்து வருடம் படித்துவிட்டு வந்த இவர், தங்கையைப்போல சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாதவர்.. அதனால் ரேவதி கலாமந்திர் என்கிற பிலிம் அகாடமியை ஆரம்பித்து கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார். இந்த அகாடமியில் சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து படிப்புகளும் உள்ளன. இந்த அகாடமியில் இயக்குனர் பிரியதர்ஷன், சங்கீத் சிவன் உட்பட பல வி.ஐ.பிகள் வந்து வகுப்புகள் எடுக்கும் ஆச்சர்யமான நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது உண்டு.
அதுமட்டுமல்ல இதை ஆரம்பித்த அன்றே சூப்பர்ஸ்டார் மோகன்லால் ரேவதியின் அம்மா மேனகாவை அழைத்து 'நான் எப்போ வந்து கிளாஸ் எடுக்கட்டும்..?” என தனது விருப்பத்தையும் தெரிவித்து உள்ளாராம்.. சரியாக இரண்டு வருடம் கழித்து இந்த அகாடமியில் இருந்து பயிற்சியில் தேறி வெளியே வரும் நான்கு பேர்களை வைத்து, அரைமணி நேர அளவில் நான்கு படங்களை எடுத்து அவற்றை இரண்டு மணிநேர படமாக ஆக்கி சென்சார் சான்றிதழுடன் வெளியிடும் எதிர்கால திட்டமும் இருக்கிறதாம்.. இந்த கலா மந்திரின் சி.இ.ஓவாக அம்மா ரேவதி சுரேஷ் இருக்க, இதன் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பை கீர்த்தி சுரேஷ் ஏற்றுக்கொண்டு இருக்கிறாராம்